கீழடி எனும் தாய்மடி

கீழடி என்றொரு தாய்மடி கிடைத்தது
வைகையின் படுகையிலே!
வாழ்ந்த எம் தமிழினம் பல்லாயிரம்
ஆண்டுகள் முந்தைய எச்சங்களை
சூழ்ந்த எம் ஆய்வினில் பூமியின்
ஆழத்தில் அமைதியாய் தூங்கியதே!
ஆழ்ந்த எம் பாரதியின் சொற்களை
‌‌‌ உரக்க நான் சொல்லிடுவேன்.

எந்தையும் தாயும் கொஞ்சி குலாவி
இருந்ததும் இந்நாடே
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே!
அந்த தமிழினம் வாழ்ந்த வாழ்வினை
தந்தது கீழடியே!
முந்தைய கிபி ஆறாம் நூற்றாண்டின்
அற்புதம் பாரடியே.

சட்டியும் பானையும்காட்டிய கலைகளை
எப்படி நான் உரைப்பேன்
வெட்டிய பூமியில்தாய்மொழி கிடைத்தது
உயிரினும் நான் மகிழ்ந்தேன்.
ஒட்டிய வயிறுகள் யாரும் இல்லையிங்கு
உயரிய மனை இடங்கள்
கட்டிய கட்டிடம் காட்டிடும் நல்லதோர்
நாகரிக வாழ்வதனை.

சீரடி மண்ணில் கிடைத்ததெல்லாம் நம்
தமிழரின் வாழ்வியலே!
ஆழ்மனம் தோன்றி அற்புதம் கான
அனைவரும் முயன்றிடுவோம்.
வாழ்ந்தவரெல்லாம்தாய்மொழி காத்தார்
தலையை நிமிர்த்திடுவோம்.
வாழும் நாளும் தமிழ் மொழி காக்க
சத்தியம் செய்திடுவோம்.

எழுதியவர் : சு.இராமஜோதி (24-Jun-20, 6:13 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 151

மேலே