சுலப வெண்பாவும் கடின வெண்பாவும்

சுலப வெண்பாவும் கடின வெண்பாவும்

நாலு வரிகளிலும் முதல்சீரில் இரண்டாம் எழுத்தான எதுகையை மட்டில்ஒன்றுபோல்
எழுதி தனிச்சொல்லிலும் எழுத ஆகுமோ வெண்பா ஆகாது. கேள்


அருமைக் கவிதை விரும்பி அமைக்க
பெரும்புலவ ரெல்லாம் இருந்தார்--- தருவென
அன்று இருப்பவர் நன்றாய் புனைகிறார்
இன்று புதுக்கவிதை யில்


முதல் வரியில்
முதல் சீரில் அ இரண்டாம் சீரில் க் + அ. முதல் பொழிப்பு மோனை நான்காம் சீரில். அ. என இரண்டு
இரண்டாம் பொழிப்பு மோனையாக உள்ளதுஆக ஒருவரியில் மூன்று மோனைகள் உள்ளது.

அடுத்து எதுகைகள்

முதல் சீரில் அரு. "ரு ". மூன்றாம் சீரில் விரு. ". ரு. " பொழிப்பு எதுகை மொத்தம் இரண்டு
எதுகைகள் வந்துள்ளது

இரண்டாம் வரியில்
மோனைகள்
முதல் மூன்று சீரிலும் பெ (எ) ரெ. (எ) மற்றும் இ என மூன்று மோனைகள் உள்ளது.
இரண்டு. ரெ. இ பொழிப்பு மோனைகள் உள்ளன. மொத்தம் இரண்டே போதுமானது.
(இ ஈ எ. ஏ ஓத்த மோனைகள்)

எதுகை

முதல் சீரில் பெரும். ரு எதுகையாகும் மூன்றாம் சீரில் இரு ரு பொழிப்பு மோனை, தனிச்சொல்லில்
தரு ரு பொழிப்பு மோனையாகும் இப்படி மூன்று வர எழுதலே சிறப்பு.

(ஆனால் பலரும் முதல் சீர் மற்றும் தனிச்சொல் சீரில் மட்டும் எதுகை எழுதுகிறார். அதை ஏற்றுக்கொள்கிறார்கள்
காரணம் இரண்டைத் தேடியே அழுத்துப் போவார்கள்.)

மூன்றாம் வரியில்

மோனை
முதல் சீர் அன்று அ மோனை எழுத்து மூன்றாம் சீரில் நன்றாய் ந்+ அ. ,= ந பொழிப்பு
மோனையாகும்.

எதுகை
அன்று. "ன் " முதல் எதுகை மூன்றாம சீர் நன்றாய். " ன் " பொழிப்பு எதுகை நான்காம்
சீர் புனை ன்+ஐ இன்னொரு பொழிப்பு மோனை ( அ. ஆ ஐ ய் ஒரு இன மோனைகள்)
மொத்தம் மூறு எதுகைகள் வந்துள்ளது ஆனால் இரண்டே போதுமானது

நான்காம் வரியில்

மோனை
முதல் சீர் இன்று. இ மோனை எழுத்து மூன்றாவது சீரில் யில் ய்+இ. யி பொழிப்பு மோனை யாகும்.

எதுகை
முதல் சீரில் மட்டும் இன்று என்பதில் ன் எது கையாக வந்துள்ளது. சிந்தடியில் ஒன்றே
(எதுகை) போதுமானது இரண்டு வார சிறப்பாகும் இரண்டாம் சீரில் புண் கவிதை என்றிட
கிடைக்கும். ஆனால் கவிஞர்கள் கோபித்துக் கொள்வார்கள்.


கடின வெண்பா

மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே

பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச்

செய்யதாள் வெள்ளைச் சிறையன்னஞ் செங்கமலப்

பொய்கைவாய் போவதே போன்று. (129)



இலக்கிய வெண்பா இலக்கணம்

1.மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே

இந்த முதல் வரியில்
மோனைகள்
முதல் சீர் மன்னர் இதில் ம மோனை யாகும் இந்த மோனை மூன்றாவது சீரிலும்
வரவேண்டும். அதற்கு மூன்றாவது சீரில் மரைபூத்த இதில் ம முதலெழுத்து மோனை
என வந்துள்ளது. ஆனால்புலவர்கள் தாமரை என்ற சொல்லில் உடைத்து வந்த. மரை
என்பதால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் ஆகவே நான்காம் சீரில் காணும் மண்டபத்தே
என்னும் சொல்லில் வரும் ம வைப்பொழிப்பு மோனையாகவும் கொள்வர்

அடுத்து முதல் வரி முதல் சீர் மன்னர் சொல்லில் வரும் ன் எனும் எழுத்தை முதல்
எதுகையாகவும் அதேவரியில் நான்காவது சீரில் வரும் மண்டபத்தே. சொல்லின் "ண் ,"
பொழிப்பு எதுகையாகக் கொள்வர் .இப்படி ஒவ்வொரு வரியிலும் மோனை பொழிப்பு
மோனை எதுகை யும் பொழிப்பு எதுகையும் வருதல் வேண்டும்.

இரண்டாவது வரியை கவனியுங்கள்

பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் --- மின்னிறத்துச்

இதில் முதல் சீரின் முதலெழுத்தையும் மூன்றாம் சீரின் முதல் எழுத்தும். "பொ " "போ"

உ. ஊ ஒ ஓ ஒரு இனம் என அவற்றின் உயிர் மெய்கள். பொ. போ மோனையாகி உள்ளது

அதே போல் எதுகைகள். முதல் சீரின் இரண்டாவதாக அமைந்துள்ள "ன் " பொன். நாலாவது
சீரில் (தனிசொல்லில்). மின் வந்துள்ள தனிச்சொல் எதுகைகளாகும்.

மூன்றாவது வரியை கவனியுங்கள்

செய்யத்தான் வெள்ளைச் சிறையன்னஞ் செங்கமலப்

மூன்றாவது வரியில் நான்கு சீர்களிலும் தவறாது மோனைகள் வருவதை கவனியுங்கள்
செ. வெ சி (இ) செ இ ஈ எ ஏ இவைகள் ஒரினமாகும். இரண்டுக்கு அதிகமான மோனைகள்..
ஒன்று மூன்றாம் சீரில் மோனை வேண்டு மென்பர் ஆனால் மூன்று பொழிப்பு மோனை
கள் அற்புதம் அதிசயம்

மூன்றாவது வரியில் எதுகையை பாருங்கள்


முதல் சீரில் செய் இதில் இரண்டாவது எழுத்து. " ய் " ய + ஐயின் உயிர் மெய்யாகும்
மூன்றாவது சீரில் சிறை. என்பதில் " றை ". ற + ஐ எதுகையாகும்ஆகும்


நான்காவது வரியை சற்று கவனியுங்கள் ( முசீரிலும் மோனைகள்,)

பொய்கைவாய் போவதே போன்று

பொய் இதில் பொ. மோனையாகும் அடுத்து இரண்டு பொழிப்பு மொனைகள் போ. போ

இப்படி மூன்று சீரிலும் மோனைகள் அமைத்து எழுதுதல் ஒன்றிரண்டு பேரும் அற்புதம்.

போழிப்பு மோனைகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் சீரில் வருகின்ற அற்புதம் பார்க்க
முடிகிறது.

எதுகையை கவனியுங்கள்

முதல் சீரில் பொய் என்பதில். ," ய் ," எதுகையாகும் ய + ஐ. = ய் ஆகும் இரண்டாவது சீரில்
போவதே எனும் வார்த்தையில் இரண்டாம் எழுத்து " வா. ". ஆகும் . வ் +அ = வ. ஆகும்
அ. ஆ. ஐ ய இவைகள். ஒரு இனமாகையால் எதுகை என்று கொள்ள முடியாது. ஆகையால்
சிந்தடியில் (முச்சீரில்) ஒரு எதுகையே போதுமானது


இதைப் போன்று எழுதினால் தான் வெண்பா ஆகும் . ஒவ்வொரு அடிக்கும் குறைந்தது
இரண்டு மோனைகள் எதிர்பார்ப்பார்கள். அதுபோலவே பொழுப்பு முனைகள் வரிக்கு
வரி மூன்று வரியிலும் எதிர் பார்ப்பார்கள். அப்படியிருக்க புலவர்கள் பாராட்டுவார்கள்
எதுகை குறை மோனைகள் குறையக்கூடாது. சிலர் பொழிப்பு எதுகை ஒருவரியில்
விட்டு விடுவார்கள். மற்ற இரு வரியில் பொழிப்பு எதுகை சேர்த்திருப்பர். ஒரு எதுகை தானே
என்று ஏற்றுக் கொள்வர்.

இப்படி யார் எழுதுவார் வெண்பாவிற்கோர் புகழேந்தி என்பார் அவர் எழுதிய பாடல் தான் இது.
இப்படி இதன் இலக்கணம் அறிந்து எழுவார் மிக சொற்பம்.

ஆக வெண்பாவை எழுத்ப் பழகுங்கள். புலவர்கே புலியாம் வெண்பா.

எழுதியவர் : பழனிராஜன் (25-Jun-20, 6:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 302

மேலே