பொறுப்போம்
பொறுப்போம்
தமிழுரை யாடத் தமிழரா வரோசொல்
தமிழரைப் பாடின தமிழ்பா ரதிவிடல்
முப்பது கோடி முகமுடை யாளென
தப்பா தேயவன் அப்பவே நினைத்தான்
இப்பவன் நினைக்க மறந்ததேன் பாரதி
எதற்குமிக் குதர்கம் எப்பவும் இங்குமே
சுதந்திரம் தந்ததிந் ததந்திரம் பாரே
விதியென கிடந்தவர் சுதந்திரம் கிடைத்ததும்
சதிசெய் கும்பலாய் பலரும் மாறினர்
அடங்கிக் கிடந்தவன் அட்டகா சமேறிட
முடங்கி முனகுதல் ஆனார் உயர்ந்தோர்
ஓட்டு ஓட்டென சகிக்கும் அரசால்
வேட்டு வைக்கிறார் எவர்க்கு மிவரே
பொறுப்போம் பொறுப்போம் பொறுப்போம்