புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 7---
புத்தன் வீட்டுப் பூக்கள் - ௭
61. நீ கடந்து வந்த பாதையில் வேறு கால்கள் தொடர்ந்து வந்தால்
உன்னை அணைப்பதற்காக இருக்கும்
இல்லை, உன்னை அழிப்பதற்காக இருக்கும்.
62. கொள்கை பிடித்துக் கட்சி மாறுவார் சிலர்
கொள்ளை பிடித்துக் கட்சி மாறுவார் சிலர்.
63. மரத்தின் வேர் சரியில்லை என்றால்
அதன் கிளைகள் எந்நொடியிலும் மண்ணில் விழக்கூடும்.
64. இந்நாட்டில் கருத்துச் சுதந்திரம் உண்டு
கழுத்தை நெரிக்கின்ற கைகள் சொல்கிறது.
65. நீ எடுத்த கத்தியை வைக்கும் வரை
வாழ்க்கை பெரும் போராட்டம்
கீழே வைத்து விட்டால்
வாழ்வதே பெரும் போராட்டம்.
66. முகத்திரை எப்போதும் நிரந்தரமில்லை
உன்னை உண்மையாக வெளிப்படுத்து.
67. உன் முகத்திரையை நீயே கிழித்துவிடு
வேறொருவர் கிழித்தால் அவமானமே கிடைக்கும்.
68. தன்மானம் போனாலும் பெண்மானம் காத்திடு.
69. நீ செய்த தவறுகளைத் திருத்திக்கொள்
இல்லை என்றால்
அதுவே உன்னைக் குற்றவாளியாய் மாற்றிவிடும்.
70. ஒவ்வொரு விடுதலை பூக்களும்
பலரின் இரத்தத்தில் தான் பூக்கின்றது.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..