எமனான பேடிக் கொரானா

எமனான பேடிக் கொரானா

காலால் பிடித்து ஓங்கிக் கையால்
சாய்த்திடும் வீர வேங்கைச் சிங்கமும்
செந்நாய் கூட்டமோ நெடிதுயர் யானையை
சாய்த்திடும் கொடுமை படத்திலே கண்டோம்
பனியின் பள்ளம் இடமுணர் வெண்நிற
பனிக்க ரடிபனிப் பிளந்துமீன் பிடிக்குமாம்
பெருமீன் சிறுமீன் விழுங்தல் கண்டோம்
குரங்கும் குச்சியால் பூச்சியூன் உண்ணும்
பூனையோ எலியைத் துரத்தித் தின்ன
பாம்பு இரையரு கிநேர்ம் பார்த்து
பாய்ந்து கடித்து இறுக்கி விழுங்கும்
பல்லித் தவளையும் ஓனா னுமிப்படி
நரியோ வாலைக் குழியில் விட்டு
பற்றித் தின்னுமாம் ஆற்று நண்டை
முதலையும் மூழ்கி யானைக்
காலையும் இழுக்கும் தின்னும் ஆசையால்

அனைத்தும் ஆசையால் தின்னும் ஆசையாய்
அனைத்தும் தெரிந்தே தாக்க எமனென
கொரா னாவும் மறைந்து
மேகநா தன்போல் தாக்குவ தெதற்கு

எழுதியவர் : பழனிராஜன் (26-Jun-20, 10:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 64

மேலே