எழுது

எழுது.
எழுதுவதற்கு எழுதாமல்
எழுவதற்கு எழுது.
படிப்பதற்கு எழுதாமல்
படைப்பதற்கு எழுது.
எடுப்பதற்கு எழுதாமல் கொடுப்பதற்கு எழுது.
தூக்கி எறிவதர்க்கு
எழுதாமல்
தூக்கத்தை எறிவதர்க்கு
எழுது.
எரிவதற்கு
எழுது.
உள்ளதை எழுது.
உள்ளத்தை எழுது.
இயற்கையை எழுது.
இயற்கையாய் எழுது.
கண்டதை எழுதாமல்
கண்டதை எழுது.
மதத்தின் மதத்தை மரிக்க எழுது.
சாதியை சகதியாக்க எழுது.
இனத்தை உணர்த்த எழுது.
தமிழை எழுது.
தமிழில் எழுது.
தமிழை மறந்தவனை
இறந்தவன் என்று எழுது. இறந்தவனை உயிர்ப்பிக்கும் உயிரெழுத்தை எழுது.
மனிதனை போற்றுவதற்கின்றி
அறத்தை போற்றி எழுது.
மடமையை தாக்கும் ஆயுத எழுத்தை எழுது.
இறந்தும் வாழ்வதற்க்கு எழுது.
இப்படி எழுதினால் நாளை வரலாறு உன்னை எழுதும்.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Jun-20, 1:04 pm)
Tanglish : ezhuthu
பார்வை : 42

மேலே