வாழ்த்தினால் பெருமை

உணவே உயிராகுது உலகில் வாழ்வதற்கு
உள்ளவரை உய்த்திட வழிவகை வகுக்கிறது !இளமையில் உண்பது இறுதிவரை வலிவு
பட்டினியாய் இருப்பது பொலிவில் நலிவு !

முதுமையில் தேவை முப்பொழுது உணவு
முழுதாய் பெறுவதோ இப்பொழுது கனவு !
உழைத்துத் தேய்ந்த தேகமோ வாடுதிங்கு
உண்டு வாழ்ந்திடவே குப்பையில் தேடுது !

உதறிய உறவுகளால் உள்ளங்கள் உருகுது
ஊரறிய விரட்டியதால் இதயங்கள் கருகுது !
முதியோரை துரத்திய மூடர்களே கேளீர்
வயோதிகம் வந்திடும் உமக்கும் உணர்வீர் !

மூத்தோரை வணங்கி காத்தலே நம்கடமை
முதியோர் வாழ்த்தினால் நமக்கு பெருமை !
பிறந்ததும் வாழ்வதும் பெரியோர் ஆசி
பிற்காலம் சிறப்புற சிறியோரே யோசி !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Jun-20, 2:31 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 374

மேலே