நிகழாவாய்

நின்றால் நீ நிகழாவாய்
கடந்தால் நினைவாவாய்
நாளை வருவதினால் நிழலாவாய்

உன்னை நினைக்காது
நொடியே கிடையாது
ஆனால் திரும்பாது நீ போவாய்

காத்துக் கிடந்தேன் யுகமாய் வந்தாய் -கை
கோர்த்து நடந்தேன் நொடியாய் தொலைந்தாய்

மறந்தும் உனையே தேடும் கண்கள்
உன்னை தொடர்ந்தே போகும் கால்கள்
உன் வட்ட முகம் எட்டு திசையிலே
என் விடியலோ உன் இசையிலே





நீயே என் நதியானாய்
விரட்டும் என் விதியானாய் -எனை
கைதியாக்க கையோடு விலங்கானாய்

எதிரே ஒரு புதிரானாய்
தொடரும் தொடர் கதையானாய்
நேற்றைய இருட்டுக்கு கதிரானாய்

மாற்றம் தந்தாய் மறதியும் தந்தாய்
காயத்திற்கோ மருந்தாய் வந்தாய்

மண்ணைக் கொண்டு அளந்தார் அன்று
எண்ணாய் பேழைக்குள் அடைத்தார் இன்று
உண்மையில் அடைந்தது யாரென்று
அறியாது மானுடம் சுழலுது

எழுதியவர் : சங்கர் நாத் (27-Jun-20, 8:30 pm)
சேர்த்தது : Sangkar Nath
பார்வை : 41

புதிய படைப்புகள்

மேலே