கல்லில் வரும்சிலை காத்திருப்போம்
கல்லில் சிலை செய்த சிற்பி
சொல்லில் கவியெழுத முற்பட்டான்
கல்லில் சிலை செய்வது எளிது
சொல்லில் தளைதட்டாமல் சொல்வதரிதென
கல்லிலே சிலைசெய்யச் சென்றான்
கல்லில் வரும்சிலை காத்திருப்போம் !
----இயல்பான வரிகளில்
கல்லில் சிலைசெய்த சிற்பி
சொல்லில் கவியெழுத முற்பட்டான்
கல்லில்சிலை எளிதரிது சொல்லிலென
கல்லிலே சிலைசெய்யச் சென்றான் !
----இப்போது வஞ்சி விருத்தம்