சிதறியது பாறை சிதறிய துண்டு ஒன்று
சம்மட்டியால் அடித்தான் பாறையை உழைப்பவன்
சிதறியது பாறை சிதறிய துண்டு ஒன்று
அவன் காலடியில் வந்து விழுந்தது
எடுத்தான் சிற்றுளியால் செதுக்கி சிலையாக்கினான்
உழைப்பவனுக்கு பரிசு என்று அவனிடம் கொடுத்தான்
கல்லுடை கான்டராக்டர் வந்து மண்ணுள்ளிருந்து கிடைத்ததா என்று கேட்டான்
மண்ணுள்ளிருந்து கிடைத்தாலும் மண்மேல் கிடைத்தாலும்
செதுக்கியவன் எவனோ ஒருவன்தான் என்று சொல்லி நகர்ந்தான்
கல்லைச் சிலையாக்கிய அந்தக் கலைச்சிற்பி !