நகைச்சுவை துணுக்குகள் 15

மாப்பிள்ளை என்ன சொல்றார்?

தனியாப்பேசணுமாம். பெண்ணை வரச் சொல்றார்.

தனியாப் பேசறதுக்குப் பெண் எதுக்குங்க? அவரே பேசிக்க வேண்டியதுதானே.
**************************
என்னங்க, கணவனும், மனைவியுமா தெலுங்கு படிக்க ஆரம்பிச்சுட்டீங்க?

நாங்க ஆறுமாசமே ஆன ஒரு ஆந்திரக் குழந்தையைத் தத்து எடுத்துக்கிட்டு இருக்கோம். அது நாளைக்குத் தெலுங்கிலே பேச ஆரம்பிச்சிட்டா எங்களுக்குப் புரிய வேணாமா? அதுக்குத்தான்.
****************************
டாக்டர், ஏன் சர்ஜரி முடிஞ்ச உடனே தண்ணி குடிக்கச் சொல்றீங்க?

அது ஒண்ணும் இல்லேப்பா. நான் தையல் போட்ட இடம் வழியா தண்ணி லீக் ஆகாம இருக்கான்னு செக் பண்றதுக்குத்தான்.
****************
ரயில் விபத்து நடந்ததைப் பார்வையிட ரயில்வே இலாகா மந்திரியாகிய நான் கட்டாயம் போயிருக்க வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்களா?

இல்லீங்க. விபத்து நடந்த ரயிலில் நீங்கள் "போயிருக்க வேண்டும்" என்று கூறுகிறார்கள்.
*************

எழுதியவர் : ரா. குருசுவாமி (ராகு) (1-Jul-20, 6:56 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 85

சிறந்த நகைச்சுவைகள்

மேலே