காதல் தீண்டல்

விரல் தீண்டா ஸ்பரிசம்...,
உன் விழி தீண்டலால் தோன்றுதடி பெண்ணே...!
மதுவில் கிட்டா போதை தனை...,
மலரே..உன் கடைக்கண் பார்வை தந்ததடி பெண்ணே....!
உன் ஒரப் பார்வையால் ....என்
உயிர் முழுவதும் நனைத்து விடு...!
காதல் பார்வையால் ..-பெண்ணே....,
களவு நிகழ்த்தி விடு என்னுள்....!
உன் உள்ளச்சிறையினில்-என்
உயிரைப்பூட்டி வை....!
ஆயுள் முழுதும் அடைபட்டிருப்பேன்....,
அன்புக்கைதியாய்....!
நீ என்னைக்கடக்கும் ஒவ்வொரு நொடியும். ..,
ஓராயிரம் எரிமலை வெடிக்கும் என்னுள்ளே...!
உன்னைக்காணா ஒவ்வொரு நொடியும்...
இதயத்தில் இமயத்தை வைத்திருப்பது போல் பாரம் தோன்றுதடி பெண்ணே..!
காதல் பார்வையை கணப்பொழுதேனும்...
என் மீது வீசி விட்டுப்போவாயா...என்னவளே நானும் உயிர் வாழ...!

எழுதியவர் : Renu (2-Jul-20, 7:07 am)
சேர்த்தது : renu
Tanglish : kaadhal theendal
பார்வை : 370

மேலே