நீங்கள் முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து

நிருபர் கூட்டம்:
■■■■■■■■
அய்யா இப்ப வாக்கு எண்ணிக்கை நடந்திட்டு இருக்கு. கடைசிச் சுற்று இன்னும் ஒரு மணி நேரத்தில் முடியப் போகுது. உங்கள் தவளைச் சின்னத்திற்கு பெரும்பாலான மக்கள் வாக்களிச்சிருக்கிறாங்க. அறுதிப் பெரும்பான்மை இடங்களை உங்கள் கட்சி கைப்பற்றியுள்ளது. நீங்கள் முதல்வராவது உறுதி.
@@@@@@@
நன்றி, நன்றி, நன்றிகள். உங்களுக்கு இல்லையா. வாக்களிச்ச மக்களுக்கு.
@@####
சரிங்க அய்யா. நீங்கள் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து எந்தக் கோப்பில் போடுவீர்கள்?
@#######
எங்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் வெளியிட ஒரு கொள்கை முடிவைச் சட்டமாக்கும் கோப்பில் தான் என் முதல் கையெழுத்து.
@@@@@#@
அது என்ன கொள்கை முடிவுங்க அய்யா.
@@@@@#
எங்கள் கட்சி விலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன அனைத்தையும் பாதுகாக்கும் வகையில் அசைவ உணவுக்குத் தடை போடுவோம். மாதந்தோறும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு லிட்டர் நெய் இலவசமாக வழங்குவோம்.நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்திற்குத் தடைபோட்டு அதிகப் பால் கறப்பதாகச் சொல்லப்படும் ஜெர்சி மாடு வளர்க்க ஊக்கத்தொகை வழங்கப்படும். மீதியைப் பதவி ஏற்றவுடன் அறிவிக்கிறேன். இதுவே எனது கடைசி நிருபர் சந்திப்பு. இனி ஐந்து ஆண்டுகளுக்கு நிருபர் சந்திப்பு கிடையாது. போங்கய்யா. போங்க போங்க.

எழுதியவர் : மலர் (4-Jul-20, 4:53 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 140

மேலே