அங்கே அழகின் ராகங்கள்

மழை வானத்து முகில்
மௌனம் கலைத்தது
சாரலாகி தூறலாகி
சோ வென பொழிந்து ஓய்ந்தது
தெருவெல்லாம் ஓடைகள்
தொடர்ந்து தாளமிட்டு இசைபாடியது
குடைபிடித்து நடந்தவர் குடை மடக்கி நடக்க
அங்கே அழகின் ராகங்கள் ஆலாபனை செய்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jul-20, 7:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே