காதல்
காதலென்ன கனிரசமா
மாதுளை பழமா
கற்கண்டு தேனா
கரும்பு சாரா
சுவை தந்திட
சுவைத் தந்திடலாம்
உடலால் தீண்டும்
உறவு சேர்க்கும்
காமமும் போகமும்
வாயோடு மறையும்
சுவைப்போல இவை
காதல் என்பதன்பு
காதல் தயை
காதல் இதயத்தில்
காதல் மனதிற்கிதம்
எங்கும் இருக்கும்
காற்று போல
நம்முள் பரவிய
பிராண வாயு
ஜீவன் உள்ளவரை
காதலுக்கு அழிவில்லை
சுவையையும் தாண்டிய
இன்னமுதம் அதுவே