அழகு என்பது எது

வானுக்கு எது அழகு?
விண்மீன்கள் தான் அழகு.
நிலவுக்கு எது அழகு?
நிறை மாதம் தான் அழகு.
நிலத்திற்கு எது அழகு?
மலை சோலை மலர் அழகு.
உலகுக்கு எது அழகு?
உயர்கின்ற புகழ் அழகு.

கடலுக்கு அலை அழகு.
உடலுக்கு உடை அழகு.
உணவுக்குச் சுவை அழகு.
கனவுக்கு த்துணை அழகு.
மனத்திற்கு குணம் அழகு.
கருணைக்கு எது அழகு?
அன்னை தெரசாவே அதன்அழகு.

பெண்மைக்கு தாய்மை அழகு.
கற்றவர்க்கு பணிவழகு.
உண்மைக்குச் சொல்லழகு.
உயர்வுக்குப் பண்பழகு.
அன்னைக்கு அன்பழகு.
என் மனதில் தோன்றுகின்ற
எல்லாமே தமிழ் அழகு.

அழகென்று பார்ப்பதெல்லாம்
அடுத்தடுத்து முதிர்ந்து விடும்.
அன்பு பண்பு அத்தனையும்
ஒரு நாளில் மறைந்துவிடும்.
தன்னலமே இல்லாத
மனித இனம் அழகாகும்.
விண்ணளவு உயர்த்திவிடும்
மனிதாபிமானமே அழகு என்பேன்..

எழுதியவர் : சு.இராமஜோதி (5-Jul-20, 7:55 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : alagu enbathu ethu
பார்வை : 217

மேலே