தீட்டி வைத்த அழகு ஓவியமே

கொண்ட சேவல் கூவையிலே வந்ததடி உன் நெனப்பு
பந்தக்கால் நட்டுவிட தவிக்குதடி என் மனசு - உன்னை
பார்க்க பார்க்க என் உசுரு பலமாக கிழிஞ்சுடுச்சு
பம்மாத்து செய்யலடி பயமுறுத்த சொல்லலடி
பாரிஜாத பூவைப் போல வாசமிகு கொண்டவளே
பரிகாசம் செய்தவாறே பார்க்காமல் போவதேனோ
ஆறடி கூந்தலோடு அழகு நெற்றி கொண்டவளே
அத்தை அவள் பெற்றெடுத்த அழகான ராட்சசியே
ஆசையோடு உன்னை அணைத்து முத்தம் பல தரணுமே
அவுலோடு சேரும் சீனி போல ஆவலோடு வாயேண்டி
ஆற்றலோடு ஓடும் நதியைப் போல ஆலிங்கனம் செய்யலாம்
தீட்டி வைத்த அழகு ஓவியமே தீயால் உருக்கிய பசும் பொன்னே
திங்கள்கள் வருடமாய் ஒடுமுன்னே தங்க கழுத்தில்
தாலியை கட்டிக் கொள்ளு
- - - - - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (6-Jul-20, 11:03 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 104

மேலே