காவியம்
.............. காவியம்................
உன் அழகை போற்றுவதை விட
உன் கோபத்தை சமாதானம்
செய்திட வேண்டும்
நீ விரும்பியதை செய்வதை விட
நீ விரும்பாததை செய்யாமல் இருத்தல் வேண்டும்
உன் சிரிப்பை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டதை விட
உன் கருத்து வேறுபாட்டினை
மனமார ஏற்றுக்கொள்ள வேண்டும்
உனக்கு பரிசுகள் தருவதை விட
நீயே என் வாழ்க்கையின் பரிசு என்று நினைத்திட வேண்டும்
காதலில் உள்ள அழகை மட்டும் போற்றும் ~ கவிதைகளில் கூறும் காதலை விட
காலம் முடிகிற காலம் வரை உன்னை என்னுள் சுமக்கும் ~ காவிய காதல் புரிந்திட வேண்டும்
கவிதை எழுதும் எனக்கு உன்னுடன் சேர்ந்து காவியம் எழுத உன் கரம் கொடுப்பாயா?