பாசம் !

இது உள் மனதில் உதயமாகும் ஊற்று - இன்னும்
உதடுகளில் புன்முறுவலுடன் இன்றைய தோற்றம் !

அவசர உலகத்தில் இது கிடைப்பது அரிது - ஆனால்
ஏங்குவோர் பலர் இந்த பாசத்திற்காக !

தாய் வளர்த்து இன்னும் தந்தை பெயர் சூட்டி -
தாரம் தந்த வாரிசு என்று ஒரு பட்டியலுடன் பாசம் !

பல குடும்பங்களில் பிள்ளைகளில் பாகுபடுத்தும் நிலை -
சமம் இல்லாத ஒரு சரிவான தோற்றம் !

கருத்து வேறுபாடு முற்றி இதனால் - பல
களைந்து போன கூட்டு குடும்பங்கள் இன்று !

உறவுகள் சிதறிவிட்ட நிலையில் - இன்று
பாசத்திற்காக ஏங்கும் ஒரு நிலை !

"பாசம் " இது பாகுபடுத்தாத வரை நிலைக்கும்
வேற்றுமை கண்டால் பிளவு படும் எல்லா நிலையும் !

- ஸ்ரீவை. காதர் .


எழுதியவர் : ஸ்ரீவை. காதர். (18-Sep-11, 2:20 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 478

மேலே