ஹைக்கூ

1) விலை போன
வேளாண்மை நிலம்
விதையாகிறது

#கட்டிடங்கள்

(2) உதிர்ந்த சருகு
இசை அமைக்கிறது
நடை #பாதையிலே.

(3) பச்சை குத்திய படியே
சாலையோரத்து மரங்கள்
#அடையாள-எண்

4) பனி போர்த்திய புல்
போர்வை நீக்கினான்
#கதிரவன்.

(5) வறண்ட நிலம்
விருட்சம் கொடுக்க வில்லை
#போட்ட-விதை

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (7-Jul-20, 11:06 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : haikkoo
பார்வை : 267

மேலே