கொடுத்து வைத்தவள் நீ
கொடுத்து வைத்தவள் நீ
உன் அன்பை
முழுவதுமாக என்னிடம்
உன் ஆசையை
அப்படியே என்னிடம்
உன் புன்னகையை
இரட்டிப்பாக்கி என்னிடம்
உன் கண்ணீரை
துடைக்கச்சொல்லி என்னிடம்
உன் வெற்றியை
ரசிக்கச்சொல்லி என்னிடம்
உன் அழகை
ஆராதிக்கச்சொல்லி என்னிடம்
உன் சோகத்தை
அழிக்கச்சொல்லி என்னிடம்
உன் காதலை
பத்திரமாய் என்னிடம்
அ.வேளாங்கண்ணி