மெளன மேடை
மெளன
மெளனத்தின் மேடைகள்
ஊமைப் பாத்திரத்திலேயே
எனைப் பேச வைப்பதாய்
!
நடுநிசி போர்த்திய
காரிருள் தனிலும்
கை விளக்கேந்தி
என் பயணச் சாலையை
அடையாளப் படுத்துவதாய்
என் மெளனம்!
எனைத் தாக்கும்
வினாக்களின் வீரியங்கள்
நடுநிலையாக்கப் படுகின்றன்
என் மெளனத்தின் சேர்மானத்தால்!
மெளன வனத்தில்
விளைந்த விருட்சங்கள்
என் உயிரின் வேரை
இறுத்திப் பிடிப்பதாய்
மனச் சரிவிலிருந்து!
மெளனத்தின் மடி சாய்ந்து
சாயமிழந்து பிரிகின்றன
என் கோபத்தின் இழைகள்
தடுமாற்றங்கள் இளைப்பாறும்
மனப்பந்தலின் கால்களாய்
தனை ஊன்றிக் கொள்கிறது
என் மெளனம்!
என் மெளனப் பிரதேசத்தில்
பிரவேசிக்க நுழைவிசையேந்தி
நிற்கிறது என் தனிமை!
சு.உமாதேவி
!