காதல் வேண்டும்

கற்பனைகள் வற்றி
கவிதைகள் முளைக்காமல்
காய்ந்து போன மனக்காட்டில்
தூறல் போட காதல் வேண்டும்

நினைவுகள் துரத்தி
நித்திரைக்கால் ஓய்ந்து
களைத்திருக்கும் மான்மனதின்
உயிர்த்தாகம் தீர காதல் வேண்டும்

மகிழ்ச்சி கூடிட - நம்
மகனின் கை மாலையாகிட
திளைத்திருக்கும் மணவாழ்வில்
மாங்கல்யமாய் காதல் வேண்டும்

எழுதியவர் : துகள் (9-Jul-20, 10:57 pm)
சேர்த்தது : துகள்
Tanglish : kaadhal vENtum
பார்வை : 198

மேலே