காதல்

என்ன சொல்ல என்ன சொல்ல
என் மனசெல்ல அந்த புள்ள...
அங்க பாரு இங்க பாரு
என் நெஞ்சுல அவ பேரு...

காத்துல சேத்துல
பறக்குது புரளுது
அவளோட ஞாபகம்...

மண்ணுல விண்ணுல
அவளோடு வாழ
துடிக்குது என் இதயம்...
நஷ்டத்திலும் கஷ்டத்திலும்
அவளுக்காக எதையும்
தாங்கிடும் என் இதயம்...

ஆடையிலும் கோடையிலும்
வளர்ந்திடும் வாடிடும்
பயிறும்...
காலையிலும் மாலையிலும்
அவளை காணாமல் துடித்திடும்
என் உயிரும்...

உண்ணும் போதும் தூங்கும் போதும்
உணவிலும் கனவிலும்
தென்படுது அவளது முகம்...
இன்றும் என்றும்
அவளுக்காக வாழ்ந்திடுவேன்
ஒரு யுகம்...

எழுதியவர் : நாச்சான் (9-Jul-20, 8:44 pm)
சேர்த்தது : நாச்சான்
Tanglish : kaadhal
பார்வை : 144

மேலே