அவளுக்கு நிகர் அவளே
நாணம் அது பெண்ணாக
நளினம் அவள் வரமாக
கவிதை அவள் மயமாக
பண்பு அவள் வரமாக ,
கற்பனையில் சீதையாக
கற்பிலே கண்ணகியாக
காவலிலே தெய்வமாக
கண்ணியத்தின் உதாரணமாக
மேன்மையிலே பெண்ணாக
புன்னகையில் பூவாக
உண்மையின் ஊற்றாக
உதவியில் ஊன்றுகோலாக
அகிலமும் அவளுக்காய்
ஆளுமையும் அவளுக்காய்
பெருமையின் பொக்கிஷமாய்
பொறுமையின் நிழலாய்
குடும்பத்தின் கோவிலாய்
தர்மத்தின் தலைவியாய்
அன்பெனும் ஆயுதமாய்
வாழும் அவளுக்கு நிகர் அவளே