புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 22---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௨௨

211. நீ யாரை வைத்து மற்றவருக்குக் குழி தோண்டுகிறாயோ?...
அவரே உனக்கும் குழி தோண்டக் காத்திருப்பார்.

212. நீ வீணடிக்கும் ஒவ்வொரு நொடி நேரத்தையும்
நாளை யாரிடமாவது கடன் கேட்க நேரிடும்.

213. உன் தேவையில்லாத செலவுகள்
உன்னைப் பெரும் கடன்காரனாய் மாற்றுகிறது.

214. நேர்மையாகச் செயல்பட நினைக்காத எந்தவொரு அதிகாரமும்
உன்னை மிரட்டி அடிபணிய வைக்கவே நினைக்கும்.

215. பிரச்சனை வரும் முன் காக்க முயல்வதை மறந்து விட்டு
பிரச்சனை வந்தப் பின் காக்க முயல்வது வழக்கம் ஆகிவிட்டது.

216. யாரோ?... சிலரின் கவனக் குறைவினால் தான்
எதிர்பாராத விபத்துகள் கூட அதிகம் நடக்கிறது.

217. பொதுவான ஒன்றை இது எனக்கு மட்டும் என்று எடுத்து வைத்துக் கொண்டால்
அதை நீ அடித்தே பிடுங்கு.

218. மக்களால் வந்தவர் மக்களையே ஆட்டிப்படைக்க நினைத்தால்
கவிழ்ந்தே விழுவார், நிச்சயம் அது நடக்கும்.

219. ஒரு பிரச்சனையைத் தீர்த்து வைப்பதை விட
சரியான தீர்வு வழங்குவதே மிகச் சரி.

220. நடந்த பாலியல் வன்கொடுமைக்குத் துப்பாக்கிச் சூடு ஒரு ஆறுதல்
அந்த வன்கொடுமை நடப்பதைத் தடுக்க சட்டமே மாறுதல்.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (11-Jul-20, 9:56 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 86

மேலே