சிறந்த காதல் கவிதை
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
இனியவளே!
நீ
ஜன்னலைத் திறக்கும் போது
நான்
தென்றலாக வேண்டும்.....
நீ
காலையில்
கண்விழிக்கும் போது
நான்
தேனீர் கோப்பையாக வேண்டும்...
நீ
அலங்கரிக்க அமரும் போது
நான்
கண்ணாடியாக வேண்டும்...
நீ
மழை வெயிலில்
நடக்கும் போது
நான்
உன் கையில்
குடையாக வேண்டும ்.....
நீ
கோவில் வீட்டில்
சாமி கும்மிடும் போது
நான்
குங்குமமாக வேண்டும்....
நீ
தண்ணீர் எடுக்கும் போது
நான்
செப்பு குடமாக வேண்டும்....
நீ
காலெடுத்து நடக்கும் போது
நான்
காலடியாக வேண்டும்...
நீ
தாலிகட்ட குனியும் போது
நான்
மணமகனாக வேண்டும்
நீ
தாயாக வாழும் போது
நான்
உனக்கொரு சேயாக வேண்டும்...
நீ காலமாகும் போது
நான்
உன்னுடைய
கல்லறையாக வேண்டும...
*கவிதை ரசிகன்*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷