தாயின் மடியில்

கருவில் என்னை சுமந்து
வலிகள் பல கடந்து
என்னை ஈன்ற தாயே!
உன் மடியில் தலைவைத்து
உறங்கும் போதினிலே
என் மனவலிக்கு
மருந்திட்டு என்னை
தேற்றும் தாயே !
உன்மடித்தூக்கம்
களைந்து விழிக்கும்
போதினிலே கண்டேன்
என் துயரங்கள்
துளைந்து புதிதாய்
பிறந்தேன் என்று !
என் ஜீவன் பிரியும்
முன்னே என் மடியில்
உன்னை வைத்து
தாலாட்ட வேண்டும்.

எழுதியவர் : நிஜாம் (12-Jul-20, 5:09 pm)
சேர்த்தது : நிஜாம்
Tanglish : thaayin madiyil
பார்வை : 746

மேலே