அன்னையின் சிரிப்பு

ஒருவரின் அழுகை
மற்றவருக்கு
சிரிப்பை தருமா...! ! ?

தரும்....என்று
என் அன்னை
என்னிடம்
சொன்னாள்....! !

நான் பிறந்தவுடன்
என் அழுகை
சத்தம் கேட்டு...! !

தன் பிரசவ வலியை
மறந்து
அவள் சிரித்தாள்
என்று...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Jul-20, 7:15 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : annaiyin sirippu
பார்வை : 58

மேலே