இவன் நாத்திகன்சிவசாமி

அவன் தன்னை நாத்திகன் என்கின்றான்
அவன் பெயர் மட்டும் சிவசாமி
அதை அவன் மாற்றவில்லை
மாற்ற விரும்பவும் இல்லை ........
பின்புறத்திலிருந்து சிவசாமி என்றழைத்தால்
திரும்பி என்னய்யா என்பான்
தூக்கத்தில் இருப்பவனை சிவசாமி எழுந்திரு
என்று எழுப்ப ..... உடனே எழுந்திடுவான்
அதாவது ;சிவசாமி' அந்த இறை நாமம்
அவன் மனதில் ஆழ பதிந்து விட்டதொன்று
சிவ நாமம் அவன் மனதில்...
ஆழ்மனதில்..... ஆத்மாவில்
அவன் ..... அவன் தான்னைக் கூறிக்கொள்கிறேன்
நான் 'நாத்திகன்' என்று
உன் பெயர் என்னவென்று கேட்டால்
' சிவசாமி' என்பான்
அவன் 'நாத்திகன்'
ஆத்மார்த்தமான அவன்' ஆத்திகன்;
இந்த நாத்திகன் ஆதிக்கரை விட
மேலானவன்.....
ஏன் என்று கேட்டால்
தன்னை அறியாமலே
இறை நாமம் இவன் நாவில்
இறைவன் உண்டா என்று கேட்க
'இறைவன் இல்லை; இல்லை என்பான்
ஒவ்வோர் முறையும் 'இறைவன்' இல்லை
என்பான்
' அப்பா குதிற்குள் இல்லை' ..என்பது போல

நாத்தீகர்கள்...... இவர்கள் இப்படித்தான் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jul-20, 3:07 pm)
பார்வை : 38

மேலே