காலம்போன போக்கில் மீண்டு வந்த சாதனை

எழுதி எழுதி கைகள் தேய்ந்த காலங்கள் ஓடியது....
எழுத நினைப்பதை மீண்டும் நினைக்க முடியாமல் நேரம் ஓடியது...
இதயம் கனக்க கால்கள் தானாக இருளில் ஓடியது....
வலிகளை சுமந்துகொண்டு வாழ்க்கையும் ஏனோ வேகமாக ஓடியது....
திரும்பி பார்த்தேன் திசைகள் தெரியவில்லை.....
நிமிர்ந்து பார்த்தேன் நேரம் புரியவில்லை...
கண்ணில் சில கனவுகள்...
நெஞ்சில் பல நினைவுகள்....
கைகோர்த்து கூட வர யாருமில்லை....
கால்கள் நடக்க திசைகாட்ட நாதியில்லை...
தானாக ஓடிய கால்கள் ஏனோ நின்றது...
கனவுகளோடு வாழ்க்கையை மீட்டு தந்தது....

அது என் தன்னம்பிக்கையின் வலிமை என்று எனக்கும் புரிந்தது.......

எழுதியவர் : சிறகு ரமேஷ் (13-Jul-20, 4:33 pm)
பார்வை : 67

மேலே