சந்தை
#சந்தை
ஓடியாடி உழைத்துநித்தம் பெருகியது விளைச்சலுந்தான்
கூடிவந்து தரகருமே கொள்ளையடித்துப் போனாரே
வியர்வைநிதம் சிந்தியவன் உயர்வுகாணவழியில்லை
அயற்சிகண்டு வீழ்ந்தாரே அவனியிலேஉழவருமே..!
நல்லவழி வகுத்திட்டார் விற்பனைக்காய் உழவர்சந்தை
வல்லவராம் கலைஞரவர் உழைப்போரும்உயர்ந்திடவே
நேரடிக் கொள்முதலில் நிறைவான வருவாயில்
வரமெல்லாம் கிடைத்ததுபோல் உழவர்களும் மகிழ்ந்தாரே..!
சந்தையிலே மந்தையென குதித்தாரே குந்தாணிகளும்
நொந்தவாழ்வு எளியோர்க்கு தந்தாரேமுதலாளிகளும்..!
பதித்தக்கால் நீக்கிடுவோம் பாமரனும்வாழ்ந்திடனும்
கதிகலங்கி நில்லாது கயவர்களை
ஓட்டிடனும்..!
பங்குச்சந்தை நாட்டினிலே சூதாட்டம்
ஆடுதுபார்
பட்டாபட்டா பாக்கியத்தான் பரதேசி சந்தையிலே
உழைக்காது துட்டுகட்டி ஊதாரி வியாபாரம்
உற்பத்தி ஏதுமின்றி காகிதங்கள் விற்பனையில்..!
ஆன்லைனில் சந்தையென அழித்துவிட்டார்ஏழைகளை
கண்கலங்கி நிற்கின்றார் சில்லறை வணிகருமே
நேரடியாய்ப் பொருள்வாங்கி ஆதரிப்போம் நம்மவரை
தேரினிலே ஏற்றிடனும் தொழிலாளி
வர்க்கத்தையே.!
எத்தனையோ சந்தையுண்டு யாமறிந்த நாட்டினிலே
எத்தனைப்போல் ஏய்க்கின்றார் ஆணும் பெண்களென
வழக்குமன்றம் போகுதுபார் வாழ்வறுக்கும்வேதனைகள்
மாற்றந்தான் காணவேனும் திருமணச் சந்தையிலே..!
#சொ.சாந்தி