சங்க இலக்கியம் -- தொல்காப்பியம்

வெற்றிவாகை சூடுவது என்ற பதம் அனைவருக்கும் தெரியும் . " வாகை சூட வா " என ஒரு திரைப்படம் கூட இருக்கிறது . வாகை சூடுவது என்றால் என்ன ?

தொல்காப்பியம் சங்க காலத்தின் போர்களை ஐந்திணைகளாக பிரித்துள்ளது . அவை
வெட்சி , வஞ்சி , உழி ஞாஐ (uzhingyai ) , தும்பை , மற்றும் வாகை என்பவை .

ராணுவ நடவைடிக்கையின் முதல் நிலையில் வெட்சி பூ சூடுதல் மரபு .

இன்னொரு நாட்டை காக்கும் அரசன் படைகொண்டு புகுவான் . அவ்வாறு சமவெளியில் நடக்கும் போர் ரியாத்தில் வஞ்சி பூ அணிவார்கள் .

கோட்டையை முற்றுகையிடும் நேரத்தில் கோட்டையை முற்றினோரும் அதில் முற்றுப்பட்டோரும் உழி ஞாஐ (uzhingyai ) பூவை சூடுவார்கள் .

தாக்குதலை விட்டு பின்வாங்க செய்துவிட்டால் வென்றவர்கள் தும்பைப் பூ சூடுவார்கள்

இறுதியில் வென்றவர்கள் சூடுவது வாகைப் பூ .

பின்னர் வென்ற மன்னன் திமிர் கொண்டு அலையக் கூடாது என்பதற்காக அறிஞர்கள் வாழ்வின் உயர்நிலை தத்துவத்தை அறிவுத்துவார்கள் . இந்நினைக்கு உரியது காஞ்சிப் பூ ஆகும் . மேலும் வெற்றி பெட்ரா பின் நடக்கும் சில நிகழ்வுகளையும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது .

வென்றவர்கள் தோற்றவர்கள் கோட்டை கதவில் இருந்து அவர்கள் சின்னங்களை நீக்கி தங்கள் சின்னங்களை அதன் மீது பொறிப்பார்கள் . பின்னர் வெற்றி பெற்ற அரசர்கள் கூத்தரோடு கை கோர்த்து கூத்தாடுவார்கள் . சாதாரண வீரர்கள் "குரவைக்கூத்து " ஆடுவார்கள் .

தலையங்கானத்து நெடுஞ்செழியன் போரில் வென்ற பின்னர் கொற்றவையை வணங்கியவிதமாக பெரியதொரு அடுப்பை வைத்து அதில் ரத்தம் நிரப்பப்பட்ட கொள்கலம் ஒரு ஏற்றி அதில் போரில் இறந்தவர்கள் உடலை சிதைத்து நிரப்பி வேகவைத்து அதை போர் கடவுளான கொற்றவையை அமைதி செய்ய படைத்தார் .

அறுவடைக்குப்பின் புது தானியங்கள் சமைத்து கடவுளுக்கு படையலாக கொடுப்பது போல போர்காலத்து கண்டா உடல்கள் கொடவைக்கு படைக்கப்பட்டது . போரில் பயன்படுத்தப்பட்ட வேல் தமிழர் சிறப்பு கடவுளான முருகு கையில் உள்ளதாகும் ." குடை கூத்து " என்ற நடனம் அரசர்களை போரில் அழிக்க போர்க்களத்தில் முருகன் ஆடியதாகவும் சிலப்பதிகாரம் கூறுகிறது . எனவே அரசர்கள் போருக்கு செல்லும் போது அதிகாரத்தை வெளிப்படையாக காட்டும் சின்னமாக குடையும் எடுத்து செல்வார்கள் .வேறெங்குமில்லாத பழந்தமிழர் நடத்திய வேலன் வெறியாடல் போன்ற சமயச்சடங்குகளோடு தமிழர் ஒன்றியதால் போரில் வேலுக்கு முதன்மையான இடம் தரப்பட்டது .

கொற்றவை முதல் முருகு வரை தமிழர் மரபு சார்ந்த கடவுள்கள் தம் வாழ்வியலோடு சேர்ந்தே இருக்கிறார்கள் . பொங்கல் வைப்பது ,மாமிசம் வைத்துத் படைப்பது , கள், சுருட்டு போன்றவை படைப்பது வேற்று மரபுகளில் இருந்து நம் கடவுள் வழிபாடு மரபு தனித்தன்மையோடு விளங்குவதையே காட்டுகிறது .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (14-Jul-20, 1:58 pm)
பார்வை : 63

மேலே