சந்து மந்து பொந்து

(பெண் பார்க்கப் போன வீட்டில்)
வணக்கம். வணக்கம்,
வாங்க, வாங்க. நீங்க சொன்ன நேரத்துக்கு நல்ல நேரத்தில வந்திருக்கிறீங்க. ரொம்ப மகிழ்ச்சிங்க.
@@@@@@
வணக்குமுங்க. எங்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சீங்க.
@@@@@@@
எனக்கு மூணு பொண்ணுங்க. ஒரே பிள்ளைப்பேறுள்ள பொறந்தவங்க.
ஏம்மா காவேரி....
@@@@@@
என்னங்க. இதோ வந்துட்டேனுங்க.
@@@@@@@
பொண்ணுங்கள அலங்காரம் பண்ணீட்டாங்களா?
@@@@@@
உம். இதோ இன்னும் ஒரு நிமிசத்தில மூணு பேரையும் அழைச்சிட்டு வர்றேனுங்க.
@@@@@@@
எங்க பொண்ணுங்க மூணு பேரும் பி.டெக் (பொறியியல்) படிச்சிருக்காங்க. தங்கப் பதக்கம் வாங்கினவங்க. மாப்பிள்ளைக்கு பிடிச்ச பொண்ணை நீங்க சொல்லுங்க. அடுத்த மாசமே நல்ல முகூர்த்தத்தில கல்யாணத்தை சிறப்பா நடத்திறலாம். எங்களுக்கு வசதிக்கு ஒண்ணும் கொறையில்லங்க. பரம்பரைச் சொத்து நெறைய இருக்குதுங்க. நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கனு சொல்லுங்க. அதுக்கு மேலயே செய்யறமுங்க.
@@@@@@
எங்களுக்கும் பரம்பரைச் சொத்து நெறைய இருக்குதுங்க. எங்களுக்கும் எந்தக் குறையும் இல்லங்க.
@@@@@@@
காவேரி, பொண்ணுங்கள அழைச்சிட்டு வாம்மா.
(மூன்று பெண்களையும் அழைத்து வருகிறார் காவேரி. மூன்று பேரும் மாப்பிள்ளை வீட்டார் மூவரையும் பார்த்து:)
வணக்குமுங்க.
@@@@@@
(மாப்பிள்ளையின் தந்தை)
வணக்கம். வணக்கம்.
@@@@@@
மாப்பிள்ளைத் தம்பி, வலதுபுறம் நிக்கறவ பிந்து, நடுவில நிக்கறவ பொந்து, இடப்புறம் நிக்கறவ....
@@@@@
(மாப்பிள்ளையின் தந்தை) இடது பக்கம் நிக்கற பொண்ணுப் பேரு 'சந்து' -ங்களா?
@@@@@@@
சரியாச் சொன்னீங்க. இவங்க பொறந்த அடுத்த நாளே எங்க குடும்ப சோதிடர் ஶ்ரீஇஷ்டலிங்க சாஸ்திரிகள்கிட்ட பொண்ணுங்களுக்கு அவுங்க ராசிப்படி பேருங்களச் சொல்லச் சொல்லி கேட்டேனுங்க. அவுரு "மூணு பேருக்கும் மூணு எழுத்து பேருங்கள வைக்கணும். அந்தப் பேருங்கள்ல கடைசி ரண்டு எழுத்தும் 'ந்து'-னு முடியணும்"னு சொல்லிட்டாருங்க
@@@@@@
ஓ..... அதுதான் 'பிந்து, பொந்து, சந்து' -ங்களா?
@@@@@
ஆமாங்க. ஆமாங்க.
@@@@@@
எங்க பையம் பேரும் மூணு எழுத்துப் பேருங்க கடைசி ரண்டு எழுத்துக்களும் 'ந்து' -ன்னு முடியுதுங்க.
@@@@@@
மாப்பிள்ளை தம்பி உம் பேரை நீயே சொல்லுப்பா.
@@@@@@@
எம் பேரு 'மந்து' -ங்க மாமா.
@@@@@
அடடா என்ன பொருத்தம், இந்தப் பொருத்தம் (பெண்களின் அப்பா சந்தோசமாகப் பாடுகிறார்)
@@@|@@
(மாப்பிள்ளையின் தந்தை)
எல்லாம் மேல இருக்கிறவன் முடிவு பண்ணினதுங்க. நம்ம கையில எதுவும் இல்லீங்க. மந்து உனக்குப் பிடிச்ச பொண்ணை நீயே சொல்லு.
@@@@@@@
மாப்பிள்ளை தம்பி மந்து, சீக்கிரம் சொல்லுப்பா. நல்ல நேரம் முடிய இன்னும் அஞ்சு நிமிசம்தான் இருக்குதப்பா.
@@@@@@
சொல்லறங்க மாமா, சொல்லறேன். வலது பக்கம் நிக்கறது வடிவேலு நடுண்டைல அடிவாங்கி பொடச்சு வீக்கமா இருக்கிற மாதிரி முடியலங்காரம் பண்ணீட்டு இருக்கிற பொண்ணு. நடுவில நிக்கறது நீளமான முடியில ரட்டைச் சடை பின்னி அதை நாலா மடிச்சுக்கட்டி தலைல ரண்டு கொம்பு வச்சிருக்கிற பொண்ணு. இடப்பக்கம் நிக்கறது பரட்டை சுருள் முடியைப் பரப்பி ரண்டு காதுக்கும் இடபக்கமும் வலப்பக்கமும் அரை அடி நீட்டிட்டு இருக்கிற பொண்ணு.
#@@@@@@
மகனே மந்து அந்த பொண்ணுங்க பேரு மறந்திருந்தா வலது பக்கம் நிக்கற பொண்ணு, நடுவில நிக்கற பொண்ணு. இடது பக்கம் நிக்கற பொண்ணுனுதான் சொல்லணும். ரதிங்க மாதிரி பொண்ணுங்கள பரட்டை, ரட்டைக்கொம்பு, பொடச்சு வீங்கின தலைன்னெல்லாம் சொல்லக்கூடாதடா.
@@@####
உடுங்க சம்மந்தி. மாப்பிள்ளைத் தம்பி வெள்ளந்தி மனசுக்காரர். இப்ப சொல்லு தம்பி எந்தப் பொண்ணு உனக்குப் பிடிச்சிருக்கு. பிந்து, பொந்து, சந்து.
@@@@@@@
எனக்கு ரட்டைக் கொம்பு 'பொந்து'தாங்க மாமா பிடிச்சிருக்கு.
@@@@@
ரொம்ப சந்தோசம் மந்து தம்பி.
@@@@@
சம்மந்திக்கும் மாப்பிள்ளைத் தம்பியோட அம்மாவுக்கும் எங்க நடுச்செல்லம் 'பொந்து'-வைப் பிடிச்சிருக்குதுங்கலா.
@@@@@@
(இருவரும்) எங்களுக்கு மந்து ஒரே பையன். தவமிருந்து பெத்த எங்க செல்லம் என்ன சொல்லறானோ அதுதாங்க சம்மந்தி எங்களுக்கு வேதவாக்கு.
@@@@@
(மாப்பிள்ளையின் அப்பா):
நல்ல நேரம் முடிய இன்னும் ரண்டு நிமிசம் இருக்குது தட்டு மாத்திக்கலாங்களா.
@@@@@
சந்தோசமுங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@அடுத்த மாதம் கல்யாணம் என்பதை நினைத்து 'மந்து'வும் 'பொந்து'வும் கனவுலகத்தில பறக்க பக்கத்து வீட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சில காதல் திரைப் பாடல் ஒன்று ஒலிககிறது.
★★★★★★★■★★★■■■■■■■★★Bindu = drop, point. Indian origin
Pontu (Pontus) = sea. Latin origin
Santu = complete satisfaction
@@@@@@
Manthu =
◆◆◆◆◆◆◆◆◆◆●●●●●●●●●●

எழுதியவர் : (14-Jul-20, 11:38 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 39

மேலே