முக கவசம்

முக கவசம்

எக்ஸ்குஸ்மி " நான் சரோஜினி மேடம் யை பார்க்கணும் "-பிரபாவதி ;
பியூன் "வெயிட் பண்ணுங்க மேடம் " - என்று நடந்தார்;
நடக்கும் போது " யாரு ? என்று ஒருவர் கேட்க, நம்ம சிடு மூஞ்சி யை பார்க்க வந்திருக்கு; என்று கடந்து போனார் ;
பேங்க் மதிய நேரம் என்பதால் கூட்டம் இல்லை;
ஒரு லேடி இன்னொரு லேடியிடம் "நம்ம மானேஜர்க்கு பிரிண்ட்ஷிப் வைக்க கூட நேரம் இருக்கு போல; ஒரு லேடி பார்க்க வந்திருக்கு என்றார். அதற்கு அந்த பெண் அந்த அம்மாவுக்கு சிரிக்க கூட தெரியுமா? ' என்று கேட்டு கிண்டலடித்தார்கள்; என் காதுகளில் எல்லாமே விழுந்தது. என் தோழி சரோஜினி பற்றி இவர்கள் பேசுவது எனக்கு குழப்பமாக இருந்தது.
எங்கள் நட்பு காலேஜ்ல் இருந்து ஆரம்பமானது. எங்கள் செட்டிலேயே சரோஜினி தான் ரொம்ப சந்தோசமாக பழகக் கூடியவள்; எல்லோரிடமும் கலகலப்பாக பேசக் கூடியவள்;
பியூன் "மேடம் உங்களை கூப்பிடறாங்க" -
நான் சரோஜினி ரூமுக்குள் சென்றேன்; என்னை பார்த்ததும் ரொம்ப சந்தோசமாக அவள் எழுந்து வந்து வரவேற்றாள்;
"என்ன பிரபா இன்னைக்கு காலேஜ் லீவா?"-சரோஜினி.
"இல்லப்பா; காலேஜ்ல இருந்து தான் வரேன். ஆன் டியூட்டி "மகளிர் தினம் வருதில்ல; அன்று எங்க கல்லூரியில் கெஸ்ட் ஸ்பீக்கர் க்கு ஆள் கூப்பிட சொன்னார்கள் ; எனக்கு உன் நினைவு வந்தது. சமூக வாழ்க்கை,வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் வெற்றிகரமாக செய்திடும் உன்னை அழைத்து பேச சொல்லலாம்; படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நான் சஜஸ்ட் செய்தேன்; சோ, அதான் உன் டைம் கேட்க வந்தேன்."- பிரபா.
" போன் ல கூட கேட்கலாம் இல்லையா? எதுக்கு உன் டைம் செலவு பண்ணி நேரா வந்த " - சரோஜினி.
" நீ மேனேஜர் ப்ரோமோஷன் கிடைத்ததுன்னு சொன்ன பிறகு உன்னை பார்க்கமுடியாத அளவு பிஸியாயிட்டேன்; அதான் ஒரு சாரி அப்புறம் ஒரு சரி வாங்கிட்டு போகலாம்னு " - பிரபா. ( இருவரும் சிரித்தோம்)

"நம்ம காலேஜ் டேஸ் நினைவுக்கு வருது; எல்லா பங்க்ஷன் ளையும் எப்படி கலக்குவோம்" - சரோஜினி;
"அதுதான் எனக்கும் ஆச்சர்யம் - நான் ஒன்னு கேட்கவா "- பிரபா ;
"இது என்ன கேள்வி? - நீ என் தோழி எதுன்னாலும் கேளு; -சரோஜினி;
" நான் வெளியில வெயிட் பன்னிட்டு இருந்தபோது இங்க உன்னை சிடு மூஞ்சி ன்னு சொன்னாங்க; - பிரபா
"நீ வேற எனக்கு இங்க நிறைய பட்ட பெயர் இருக்கு " - கழுகு, உம்மனாமூஞ்சி, கணக்கு மாஸ்டர் - சரோஜினி.
வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் நாமாக வாழணும்னா, நம்முடைய நல்ல கொள்கைகளை வாழ வைக்கணும்னா நிச்சயம் இதை எல்லாம் சிரிப்போடு கடக்க தெரியணும். - சரோஜினி.
"ஏன் அப்படி? " -பிரபா
" பொறுப்புகள் அதிகமாக அதிகமாக நம்ம மெச்சுரிட்டி லெவல் அதிகரிக்கணும். அதுவும் நம்ம வளர்ச்சி தான்.
அதனால் தான் சில நேரங்களில் பெண்கள் சிடு சிடு ன்னு இருக்கிற மாதிரி இருக்கும். "
"நம்மளையே எடுத்துக்கோ குழந்தையாக இருக்கும் போது நாம் நடந்துகிற மாதிரி வளர வளர நம்மால நடந்துக்க முடியாது. பெண்கள் வளர வளர மற்றவங்க கிட்ட எப்படி நடந்துக்கறதுன்னு கத்துக்கறோம். நம்ம பொறுப்புகளுக்கு ஏற்றார் போல கடமைகளை செய்கிறோம்.
அது போலதான் வேலை செய்கிற இடத்திலும் பொறுப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க நாம் ஸ்ட்ரிக்ட் ஆக இருக்க வேண்டியிருக்கு. "
இது என் முக கவசம்;
"எப்படி எப்படி? - பிரபா;
"மனதுக்கு அன்பே - அக கவசம் "
" பக்திக்கு சண்முக கவசம்"
அது போல பல நேரங்களில் நம்மை, நம் கடமைகளில் மற்றவர்கள் குறுக்கிடாமல் இருக்க இந்த முக கவசம் தேவைப்படுது."- சரோஜினி.
"டீ" - சப்பிடறியா? " - என்று பியூன் னிடம் ஆர்டர் செய்தாள்;
இருவரும் "டீ" சாப்பிட்டோம்.
அவங்க இப்படி பேசறது உனக்கு கஷ்டமாக இல்லையா ?
கஷ்டம் தான்; சில கஷ்டங்களை நாம் இஷ்டப்பட்டு சுமக்கனும்; குழந்தைகள் சுமப்பது போல ;

இப்ப எல்லோரும் கொஞ்சம் சிரித்து பேசினால் கூட, நமக்கு பிடித்த மாதிரி இருக்கிறவங்க கூட கொஞ்சம் அதிக நேரம் பேசணும்னு தோணும். உடனே அதையும் அசிங்கமாக பேசுற கலாச்சாரம் அதிகமாயிடுது. அந்த பேருக்கு இந்த பேர் பரவாயில்லை இல்லையா ? - சரோஜினி.
" ஆமாம் ; ரொம்ப சரி "-
"காலேஜ்ஸ் ல கூட ஆணும் பெண்ணும் தூய்மையான நட்பு, அண்ணன், தம்பி பாசம் எல்லாம் காணாமல் போயிடுத்து; எங்க பாரு படிக்கிற வயசுல தப்பான விஷயங்கள், விஷம் மாதிரி பரவிடுத்து; இன்னைக்கு ஜெனெரேஷன் சரி இல்லை" - பிரபா;
"தப்பு பிரபா" - இன்றைய ஜெனெரேஷன் க்கு இதெல்லாம் சொல்லிக் கெடுத்துக் கொண்டிருப்பது நம்ம ஜெனெரேஷன் தான் என்பதை நாம் மறந்தே போகிறோம்;
" அசிங்கமான வெப் சைட் ஸ் இன்னைக்கு இளைஞர்களை விட பெரியவங்க தான் பார்க்கிறாங்க; இன்னும் சொல்ல போனால் தப்பான விளம்பரங்கள், எப்போது பார்த்தாலும் ஆடிக் கொண்டே இருக்கும் சினிமாக்கள், எந்த உறவுகளையும் அண்ட விடாத நம் சமுதாயம்" - சொல்லிக் கொண்டே இருக்கலாம்; நாம் தான் நம் சமுதாயத்தை அழித்துகொண்டிருக்கிறோம்.
நமக்கு ஏற்பட்ட ஏமாற்றம், நமக்கு கிடைக்காத வாழ்க்கை நம் குழந்தைகள் அனுபவிக்கட்டும் என்று எத்தனை அரைகுறையாக டிரஸ் பண்ணாலும் ஒவ்வொரு வீட்டிலும் தாய் கண்டிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்; "- சரோஜினி;
"அப்போ இன்றைய வன்முறைக்கும், பாலியல் வன் கொடுமைக்கும் என்ன சொல்ற? " - பிரபா.
"எண்ணங்களுக்கு எப்போதுமே நல்ல வலிமை இருக்குன்னு நம்புகிறவள் நான்; இவ்வளவு டெக்னாலஜி இல்லாத காலத்திலே நம் காந்தி அவர்கள் அகிம்சயை அன்றய எல்லோர் மனதிலும் விதைக்க முடிந்தது. ஆனால் இன்று டெக்னாலஜி ல எத்தனை முன்னேற்றம் இருந்தும் நம்மால் தவறுகள் இல்லா சமுதாயத்தை உருவாக்க முடிகிறதா? அதற்கு காரணம் பேராசை;
புதிய சிந்தனை என்ற பெயரில் புது புது கற்பனைகள் என்று மக்களின் மனதில் பயத்தையும், தேவையற்ற விஷயங்களையும் திணிக்கிறோம்; முதலில் நம் டெலிவிசன் ப்ரொக்ராம்ஸ் க்கு ஒரு சென்சார் வேண்டும் ; அப்போது தான் நம் அடுத்த தலைமுறை தப்பிக்கும். - சரி தானே நான் சொல்றது;
" எப்போதும் ஒரு பெண்ணுக்கு அவர்கள் வீட்டில் இருக்கும் ஆண்களே துணையாய் வர இயலாது; வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறு ஒரு அண்ணனோ , அப்பாவோ, இல்லை நண்பனோ தான் காவலாக இருக்க முடியும்; ஜல்லி கட்டு ஸ்ட்ரைக்கிள் நம் தலை முறை இதை நிருபித்தார்கள்; மறுக்க முடியுமா ?" –
நம் ஜெனெரேஷன் ஆண்கள் மனதில் இதை விதைக்கணும்; "இரை தேடுவதோடு இறையையும் தேடு" என்று நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை; மனிதா நிலை இல்லா மனித வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் தாம்பத்ய வாழ்க்கை முடிந்திடும்; அப்போது இறை வாழ்க்கை மட்டுமே உன்னை வழி நடத்தும்; தவறான எண்ணங்களில் இருந்து நம்மை வெளி கொணரும் என்று தான்;
" எப்படி சரி பண்றது ? ன்னு கேட்கற உன் கேள்வி எனக்கு புரியுது.
" ஒரு பெண்ணை பார்க்கும் போது அவங்கள நம்ம வீட்டு மனுசியா பார்க்க ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்கணும்னு சொல்லும் பெண் புரட்சியாளர்கள் வெளி இடத்தில ஆண்கள் பார்க்கும் போது அவங்க அக்கா, தங்கை போல தெரியும் உடைகளை போடுங்கன்னு நாமும் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், சொல்லி கொடுக்கலாம் இல்லையா ?
வெளி நாட்டுல போட வேண்டிய உடைகளை வெளி நாடுகளில் போடுங்க; அங்கு சட்டங்கள் கடுமையானவை ; தவறு நடக்க வாய்ப்புகள் குறைவு; இங்கு நம் குழந்தைகளுக்கு நாம தான் இதை எல்லாம் சொல்லிக் கொடுக்கணும்.
சினிமாவுல குறைத்து டிரஸ் போடுறாங்கன்னா , எந்த நடிகையும் தனியா இல்லை; கூட்டத்தோட தான் இருக்காங்கள்; பாதுகாப்போட; அவ்வளவு ஏன்?
பெண் நம் நாட்டின் கண்கள் ன்னு சொல்லி மேடையில் வசனம் பேசும் எத்தனை நடிகைகள் நான் ஆபாசமாக உடை அணிய மாட்டேன்; எங்கோ ஒரு மூலையில் என் சகோதரி கஷ்டப் படுவது என் மூலமாக நடக்க கூடாதுன்னு கதாநாயகிகள் நினைக்கலாமே ; அவங்க முகத்திரை இது.
நம்ம நாட்டுல எத்தனை கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நடக்குது. தவறு செய்த ஆண் மகனை எத்தனை குடும்பங்கள் பகிரங்கமாக வெளியே துரத்துறாங்க? அப்படி துரத்தினால் அடுத்த ஆண் மகன் தன்குடும்பம் தன்னை வெறுக்கும் என்ற பயத்தில் செய்யாமல் இருப்பான். இவங்க முக மூடியே குடும்பம் தானே .
அவ்வளவு ஏன்?
"காசுக்காக எத்தனை அட்வெர்டைஸ் மென்ட் போடுறாங்க ; ஒரு சேனல் லயாவது பெண்களையும், பெண் குழந்தைகளையும் காப்பது நம் கடமை என்பதை சொல்லணும்னு நினைக்கணும் இல்லையா ? " - சரோஜினி;
"அப்பப்பா மடை திறந்த வெள்ளம் போல உன் பேச்சு. - சூப்பர் டி - உன் பேச்சு " - என் பெயரை காப்பாத்திடுவேன்னு நம்பிக்கை வந்திட்டுது;
ஓகே; நிறைய உன் சிந்தனைகளை பதிவு செய்ய உனக்கான மேடை நாங்க தருகிறோம்; அங்க வந்து உன் பேச்சின் வீச்சை காண்பி " - பிரபா.
" என்னப்பா நீ வேற , ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்" - சரோஜினி.
" நானும் அதை தான் கேட்கறேன்: ஒரு பெண் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வாழ என்ன வழின்னு சொல்லு போதும் " - பிரபா.
அப்ப சரி " திமிர்ந்த ஞானச் செருக்கு கொண்டால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் " என்ற மகா கவி யின் வரிகளை
" உடையில் எளிமை
நடையில் நேர்மை
நடத்தையில் மேன்மை
அறிவில் தெளிவு
அன்பில் நிறைவு " - இருக்கும் பெண்கள் பாரதி கண்ட புதுமை பெண்கள், அவர்கள் ஒருபோதும் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள் என்று இன்றய தலைமுறைக்கு புரியும்படி சொல்லிவிடுகிறேன்" - சரோஜினி;
"சரிடி நான் கிளம்பவா? " - பிரபா;
"இரு நானும் வருகிறேன் ; போகும் வழியில் உன்னை ட்ரோப் செய்கிறேன் ;
" ஓவர் டியூட்டி எல்லாம் உனக்கு இல்லையா ?" - பிரபா;
"ஏய் நீயே போதும் ; என் குடும்ப வாழ்க்கை, மற்றும் அலுவலக வாழ்க்கை இரண்டும் வெற்றிக்கு முக்கிய காரணம் - என் குடும்பம்; அவர்களுக்கான நேரத்தை நான் அவர்களுக்கு கொடுக்கணும்; "- வா போகலாம் ;- சரோஜினி;
" தேவை என்றால் மட்டும் ஓவர் டைம் செய்தாலே போதும்" சும்மா , வேலை யை காட்டி நம் வீட்டு கடமைகளுக்கு நோ சொல்ல கூடாது;
"நமக்கு இரண்டும் இரண்டு கண்கள் போன்றது " - வா போகலாம் - சரோஜினி;
" உற்சாகம் தான் உன்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கு;- பிரபா .
சரோஜினியின் காரில் இருவரும் அமர்ந்தார்கள்;
"உற்சாகம் மட்டும் இல்லை; கணவரின் அனுசரணை; குழந்தைகளின் சந்தோஷம்; பெரியோர்களின் ஆசிர்வாதம் என அனைத்தும் சேர்ந்து தான்; - சரோஜினி;
எப்ப பார்த்தாலும் உன் மாமியார் உன்னை கஷ்டப் படுத்திட்டே இருப்பாங்களே; இப்போ எப்படி? சமாளிக்கிற ? - பிரபா.
"வித் மாஜிக் வர்ட்ஸ் - ஒரு தேங்க்ஸ் ; ஒரு சாரி " - இதை எல்லோரும் தன் குடும்பத்தில் யூஸ் பண்ணாலே நிம்மதி கிடைத்திடும்" - எட்டு மணி நேரம் வேலை பார்க்கும் இடத்தில மேலதிகாரி சொல்றத கேட்டு நடக்கிறோம்; மாமியார் சொல்றத கேட்காமல் சண்டை போடுறோம்;
"எல்லா இடத்திலும் நமக்கான நேரம் வரும் வரை காத்திருக்கும் பொறுமை வேணும்".
என் நாத்தனார் பிரச்சனையை இரண்டு வருஷம் முன்னாடி தீர்க்க உதவி செய்தேன். அப்போ தான் அவங்க என்னை புரிந்து கொண்டார்கள்; இப்போ ஓகே ;"-சரோஜினி.
" உன் குழந்தைகளை எப்படி சமாளிக்கிற " - பிரபா.
"குழந்தைகளை சமாளிப்பது ரொம்ப ஈஸி"-
" அவங்க முதலில் நம்ம கவனிப்பாங்க" - வீட்டில் பெரியவர்களுக்கு நாம் மரியாதையை கொடுப்பதை புரிந்து கொள்வார்கள்; அப்புறம் " நம்ம கணவன் மனைவி சண்டையை குழந்தைகள் முன்னாடி வைக்க கூடாது. "
"அவங்க என்ன டிசிப்ளினில் இருக்கணும்னு நாம் நினைக்கிறோமோ அதை தான் நாமும் அவர்கள் முன்னாடி செய்யணும் " - அவ்ளோதான் - சிம்பிள் - சரோஜினி.
" ஏய் மார்வலஸ் - எங்க இருந்து இதை கத்துகிட்ட ?-பிரபா.
" நம்ம அம்மா, அப்ப கிட்ட இருந்து தான்; அவங்க அப்படித்தானே நம்மை வளர்த்தாங்க.
இன்று வேலையே காரணம் நாம் காட்டினால் நம் குழந்தைகளும் அவங்க வேலையே நம்மிடம் காட்டுவாங்க" - சரோஜினி.
எல்லா இடத்திலும் நான் யூஸ் பண்ணுவது முக கவசம்; தலை கவசம் போல இதுவும் நம்மை நம் உணர்வுகளில் இருந்து காக்கும்; பிறர் முக ஸ்துதி, தீய பழக்க வழக்கங்களில் இருந்தும் நம்மை காக்கும்;- சரோஜினி.

பேஷ் ; பேஷ்; ரொம்ப நல்லாயிருக்கு; நானும் இதை பழகிக்கறேன் என்று சிரித்தாள் - பிரபா;
சிரிக்க பேசினாலும் நாம் சிந்திக்க மறுக்க கூடாது - என்று கூறி விடை பெற்றாள் என் தோழி சரோஜினி;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (13-Jul-20, 9:30 pm)
சேர்த்தது : Samyuktha
Tanglish : muga kavasam
பார்வை : 201

மேலே