நீயா நானா

முற்றும் கற்றவர்
யாருமில்லை
உலகில்...! !

அது போல்....
முற்றும் துறந்தவர்
யாருமில்லை...! !

நீர்க்குமிழி போன்ற
வாழ்க்கையில்
நிரந்தரம் என்பது
யாதுமில்லை...! !

நிலையில்லா உலகில்
தொடக்கம் என்றால்
ஓரு முடிவுண்டு...!

இதில்..
நீயா...! ! நானா...! !
என்று நீள்கின்ற வாதம்
வீண் வாதம் என்று
ஆடி அடங்கும் போது
புரியும்...! !

ஆனால்...?
புரிகின்ற போது
யாவும் அடங்கிவிடும்
மண்ணுக்குள்ளே...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Jul-20, 10:13 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 68

மேலே