திருவள்ளுவரும் திருக்குறளும் நடுநிலைமை

திருவள்ளுவர் எந்த மதத்தையும் சேராது சமூக சிந்தனையாளராக இருந்தார் என்பதற்கு சான்று அவர் எழுதிய திருக்குறளில் நிறையவே இருக்கிறது . சமூக சிந்தனையாளர்கள் புறக்கணிக்கப்படுவது சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது என்பதற்கு திருவள்ளுவரின் வாழ்க்கையே ஒரு சிறந்த உதாரணம் .உலகத்தின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் ஒரே நூலில் முப்பாலாக பிரித்து உலக அரங்குகளில் தமிழனின் பெருமையை பறைசாற்றியவர் திருவள்ளுவர் அறிவாசான் .

" தினையளவு போதாகி சிறுபுன் னிர் நீண்ட பனையளவு வள் கைக்கு உறங்கும் வளநாட .. !
வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி எனத் திருக்குறளின் பெருமையை அக்கால புலவர் கபிலர் பெருந்தகை " திருவள்ளுவமாலையில் வியந்து போற்றிப் பாடியிருக்கிறார் .

அதாவது அதிகாலை நேரம் கபிலர் பசும்புல் ஒன்றைப் பார்க்கிறார் . தரையுடன் ஒட்டிக் கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் நுனியில் தினையின் அளவைக் காட்டிலும் குறைவான பனித்துளியை அவர் காண்கிறார் . அப்பனித்துளியை உற்று நோக்கி அந்த பனித்துளியின் அளவுக்கேயுள்ள அதனருகே ஓங்கி நிற்கும் பனை மரம் முழுவதும் தெரிகிறது . அந்த காட்சி கபிலரை கற்பனைச் சிறகடித்து பறக்கச் செய்கிறது . ஆகா ! ஒரு சிறு பனித்துளிக்குள்ளே பக்கத்தேயுள்ள பனைமரம் முழுவதும் தெரிகிறதே . இதே போலத்தான் குறட்பாவுக்குள்ளும் இந்த வையத்துக்கு தேவையான பெரும் பொருள் பொதிந்து கிடக்கிறது என்று தரிக்குறளுக்கான மிகச்சிறந்த விமர்சனத்தை கபிலர் முன் வைக்கிறார் .

உலகைப் பாட்டின் இன்னிசை கேட்டுக் கண்ணுறங்கும் கோழிகளை உடைய வளநாட்டு மன்னனே ! சிறு புல்லின் தலையில் உள்ள தினையளவிலும் சிறு பனிநீர் , நெடிதுயர்ந்த பனைமரத்தின் உருவத்தைத் தன்னில் தெளிவாக காட்டும் . அதுபோல வள்ளுவரின் குரல் வெண்பாக்கள் அரிய பொருளை தன்னகத்தே அடக்கி மிகத் தெளிவாகக் காட்டுகின்றன .நீர்வளமிக்க நாட்டை ஆளும் அரசே , இதை உணர்ந்துகொள் என்று அறிவாசான் திருவள்ளுவருக்கு திருமாலையை சூட்டுகிறார் கபிலர் பெருந்தகை .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (15-Jul-20, 1:39 pm)
பார்வை : 214

மேலே