இயற்கை
பிறந்த சிசுவிற்கு ஏதோ சங்கடம்
அழுதுகொண்டே இருக்க சிசுவின்
தாய்க்கு அவள் தாய் சொன்னாள்
குழந்தைக்கு தாய்ப்பால் மருந்து என்றாள்
தாயும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட
குழந்தை அழுகையும் போனது இப்போது
தாயின் மடியில் சிறிது விளையாடியதே!
மாமருந்து தாய்ப்பால்
பால் காரன் பசுவின் பாலிகாம்பை
பால்கறக்க நெருங்க பசு காலை பின்னே தூக்க
புரிந்துகொண்டான் பால்காரன் ....
பாலுக்காக ஏங்கிய கன்னுகுட்டி... இவன்
மரத்தில் கட்டி இருந்தான்.... இப்போது
அவிழ்த்துவிட.... கன்று தாவிப்போய்
தாய்ப்பசுவின் மடியைத் தழுவியது
கன்று பால் குடித்து வாயெல்லாம் பால் வழிய
உண்ட சுகத்தில் துள்ளி ஓடியது
பசுவும் மகிழ்ந்தது... பால்காரன் இப்போது
பால் கரந்தான்.. இடையூறு ஏதும் இன்றி
நமக்கு நல்லதைக் கற்று தரும் இயற்கை
இயற்கையை அறிவோம் ஒன்றிடுவோம்
நலமாய் வாழ்வோம் அன்றுபோல இன்றும்