நாடுவோம்

பரந்து விரிந்த உலகில் நிலங்கள் அதிகம் தரிசாகக் கிடக்கிறது
ஆற்றல் மிகுந்த மனிதர் எல்லாம் சீர் செய்ய சேர்ந்திடுவோம்
சின்னச்சின்ன செயல்கள் செய்து செம்மையாக மாற்றிடுவோம்
அன்னை பூமி அகம் குளிர அங்கு பயிரை ஏற்றிடுவோம்
அருகு முதல் ஆலம் வரையில் அத்தனையும் நட்டுடுவோம்
தாகம் தீர்க்க மேகம் கொடுக்கும் நீரை அங்கு சேமிப்போம்
தரமான உணவை கொண்டு தரணி முழுதும் காத்திடுவோம்
உலக உறவை ஒன்றாய் இணைக்க ஒவ்வொரு நாளும் உழைத்திடுவோம்
ஓய்வின் போது ஒன்றாய் அமர்ந்து உலக மொழிகளை கற்றிடுவோம்
உருண்டை பூமியில் உள்ளதை எல்லாம் உளமாற பிரித்துக் கொள்வோம்
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (16-Jul-20, 8:02 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 28

மேலே