என் நினைவுகளை எப்படி அழித்தாய் 555

உயிரானவளே...



தாயின் பிரசவ வலிகூட பத்து
மாதத்தில் தீர்ந்துவிடும்...

உன் பிரிவின்
வலிகள் மட்டும்...

இன்னும் எத்தனை
ஆண்டுகளில்
தீரும் தெரியவில்லை...

அழித்து பார்த்தேன் உன்னையும்
உன் நினைவுகளையும்...

தண்ணீராலும்
அழித்து பார்த்தேன்...

கண்ணீராலும்
அழித்து பார்த்தேன்...

கண்களில் இருக்கும்
உன் உருவமும்...

இதயத்தில் இருக்கும்
உன் நினைவுகளையும்...

முடிந்தால் எனக்கும்
சொல்லிக்கொடு...

என் நினைவுகளை
நீ அழித்ததுபோல...

எதனை கொண்டு
அழித்தாய் என்று...

நானும் முயற்சி செய்து
பார்க்கிறேன் உன்னை மறக்க.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (21-Jul-20, 4:27 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 779

மேலே