முருகனுக்கு பல்லாண்டு

பெண் என்பவள் இயற்கையின் படைப்பில்
கண்கண்ட தெய்வப் பிறவி, தாய் தெய்வம்
கன்னிப் பெண்ணின் கொங்கையில் காமம்
காண்பவன் அதுவே இவனை அவள் தாயாய்
சிசுவாக இருக்கையில் முலைப்பால் தந்து
நோய்நொடியின்றி வளர்த்தால் என்பதை
ஏன் மறந்தான் மூடன் பெண்ணின் மார்பகம்
மனிதரைக் காத்து வளர்க்கும் அமுதசுரபி
இறுமாப்பில் ஏதேதோ பேசும் மூடர்கள்
ஒவ்வொருவரும் ஒரு பெண்ணின் வயிற்றில்
இருந்துதானே பிறந்தார் என்பதை மறந்தது ஏனோ
பெண்நிலையில் மனித வர்க்கமே இல்லை பெண்ணே
இறைவனில் ஒரு பாதி

இறைவனை இழுவுபடுத்துவதால் இறைவனுக்கேது பாதிப்பு
மூடனே உன்னை நீயே அல்லவா இழிவு படுத்திக்கொள்கிறாய்
தனிப்பெரும் தமிழ் மொழி தொன்மொழி
என்று கூறும் இவர்கள் தமிழைத் தந்த தே
முருகன் என்பதை மறந்ததேன்
முருகென்றால் அழகு அவன்தந்தை தமிழ் அழகு
முருகனுக்கு பல்லாண்டு தமிழுக்கு பல்லாண்டு
உன்னைத் தூற்றும் ராக்கதரை நீயே தண்டிப்பாய்
சூரா பதுமரை வீழ்த்தியதுபோல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jul-20, 10:01 am)
பார்வை : 81

மேலே