கடவுள்

தலைக்கு கீழே இதயத்தை
மார்பின் மத்தியில் வைத்த
இறைவன் செயல்கள்புரிய வைக்கும்
மூளையை ஏன் இதயத்திற்குமேல் வைத்தான்
இறைவன் உள்ளானா இல்லையா என்று
இதயம் கேட்க மூளை என்ன பதில் சொல்கிறது
இதயம் மேல்நோக்கி மூளையை கேட்கிறது...
இதற்குமேல் ஒன்றும் புரியாமல் நாம்
நமக்கு மேல் காணும் வானை நோக்கி
இறைவா நீயே பதில் சொல்லு என்கிறோம்
வானில் இறைவன்.....................? வான் யாது.....?
தெரியலை...... ஆனால் வேதத்தின் உட்பொருள்
உணர்ந்தோர் கூறுவார் .... நாம் தேடி அலையும்
வான் னமுள்ளமே ....... இறைவன் உறைவிடம்

'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்
எல்லாம் ...... தேட அவன் கிடைக்கவில்லை
அவன் இல்லை ' என்றால் அது யார் தவறு ?.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jul-20, 8:16 pm)
Tanglish : kadavul
பார்வை : 112

மேலே