முகநூல் பதிவு 47
மழை.....
வட்ட நிலவு வானில் இல்லாததால்
பொட்டிழந்த கைம்பெண்ணாய் வானம்.....
திரண்டு நிற்கும் கார்மேக தேகம்
கட்டுண்டு கண்ணீர் திவலையுடன்.....
ஆதரவாய் காற்றுத் தேவன் கை அணைத்தால்
ஆனந்த ஆர்ப்பரிப்பில்
பீறிட்டு அழுதிடுவாள்.....
பூமகளும் மகிழ்ச்சியில் நனைந்திடுவாள்....
கவிதாயினி அமுதா பொற்கொடி