விழிகள் கனவுத் திரைபோல் விரிய

ஓடம் நதியில் மிதந்து சென்றால் அழகு
தோட்டம் பூத்துக் குலுங்கினால் அழகு
மௌனம் கலையாதிருந்தால் அழகு
தியானம் நிலைத்திருந்தால் அழகு
காலை சிவந்திருந்தால் அழகு
மாலை கவிந்திருந்தால் அழகு
வானம் பொழிந்தால் அழகு
வானவில் சிரித்தால் அழகு
நதிபோல் அசைந்து மலர்போல் சிரித்து
விழிகள் கனவுத் திரைபோல் விரிய
அவள் நடந்து வந்தால் கவிதைக்கு அழகு !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jul-20, 9:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2628

மேலே