பட்டுத் தெறித்த காதலது

நான் நடந்த பாதையிலே
நாளாந்தம் அவனும் நடக்கின்றான்
எங்கேயோ பார்ப்பது போல் பார்க்கின்றேன்
எனக்குள் நானே சிலிர்க்கின்றேன் மனதால்

தோளில் சுமந்த பையுடன் மிகவும்
நேர்த்தியான உடையணிந்து
மிக கம்பீரமாக அவன் இருப்பான்
கறுப்பான அவனோ மிக அழகு

துடுக்காக எனை நோக்கும் கண்கள்
எனக்கு சொல்ல வருவதென்னவோ
ஏதும் சொல்லமாட்டானா என ஏங்குகின்றேன்
என்றுமே நாங்கள் பேசவில்லை

மாதங்கள் பல மறைந்தன என்
பயணசீட்டை பெறுவதற்காக
பரபரப்போடு நான் நின்றேன்
என் பின்னாலே அவன் நின்றான்

சீட்டை பெற்று நான் அமர்ந்தேன்
என் முன்னாள் அவன் அமர்ந்தான்
லேசாக என்னை பார்த்து சிரித்தான்
சிரிப்பா அது பிரகாசமான ஜொலிப்பு

பளிச்சென்ற வெண் பற்கள்
பதித்த வைரம் போல் தெரிய
என்னையும் மீறி சிரிப்பு வர
நானும் சிரித்தேன் தப்பில்லையே

மீண்டும் ஒரு முறை சந்தித்தேன்
நாட்டை காக்கும் ராணுவ வீரனாக
நாவறண்டு நெஞ்சடைத்துப் போனேன்
மீண்டும் சிரித்து விட்டு சென்று விட்டான்

அன்று பார்த்த அவனை நான்
இன்றுவரைபார்க்கவில்லை
மிகக் களையான அந்த முகம்
என்நெஞ்சினிலே நின்ற முகம்

வெட்டி சென்ற மின்னல் போல
லேசாக பட்டு தெறித்த காதலது
எத்தனை யுகங்கள் ஆனாலும் எங்கோ
ஓர் மூலையில் உறைந்திருக்கும் முத்தான
முதல் காதலது

எழுதியவர் : Ranjeni K (23-Jul-20, 12:54 pm)
சேர்த்தது : Ranjeni K
பார்வை : 101

மேலே