வசந்தம்-அவள்-மழைத்துளி-குயில்-அவன்
வசந்தம் வந்தது
மலர்ச்சோலையில் கோல குயில்
குக்கூ குக்கூ என்று வசந்த ராகம் இசைக்க
சோலையின் அடர்ந்த புன்னைமரமடியில்
இளமாதவள் காதலனுக்கு காத்திருக்க
வானம் கொஞ்சம் இருண்டு வசந்தத்தின்
முதல் மழைத்தூறல் மண்வாசனை
தென்றலும் வந்து வீச எங்கும்
வாசனைத் ததும்பிய வசந்தம்
மலர்விழியவள் புன்னைமரத்து கிளையிலிருந்து
சொட்டிய முத்து முத்து மழைத்துளிகள்
முகத்தில் தெறிக்க இன்பமுகத்தில் புன்னகைத்தாள்
மனதில் காத்திருக்கும் மன்னனை நினைத்தாளோ
தனக்குள் ஏதேதோ பேசி மகிழ்ந்தாள்
புன்னகை இளம் சிரிப்பாய் மாற
மழைத்துளிகள் அவள் முகத்திலிருந்து
தத்தி தத்தி முத்துக்களாய் அவள் முகத்திலிருந்து
அவள் இளதனங்களில் வீழ்ந்தெழுந்து
வயிற்றில் வீழ்ந்து மலையிலிருந்து வரும்
சிற்றோடைபோல் அவள் தொப்புள்குழியை
சேர்ந்து காணாமல் போனதே
கடலில் சங்கமிக்கும் நதியைப்போல
இவ்வளவில் அவள் தலைவனும் வந்தடைந்தான் ஆங்கு இப்போது
ஈருடல் சேர்ந்து ஓருயிராய் இன்பத்தில் சங்கமிக்க
இதைக் கண்டதோ ஏனோ சோலை நீலக்குயில்
மோஹன ராகம் கூவி இசைத்தது
காதலர் பூஞ்சோலையில் இன்பஉலாவில் இப்போது