அவனா அவளா

ஆணுக்கும் பெண்ணுக்கும்தானே
நான் வந்து புறந்தேன்.
அருமை கெட்ட புறப்பா ஏன் இங்கே
திரிந்தேன்?

கதிரு நிற்கும் கழனியில
களையா நான் முளைச்சுக்
கதியிழந்து நிக்கிறனே.
அரும்பு மல்லித் தோட்டத்தில்
அரளியாய் நான் முளைச்சு
அருமை கெட்டு நிக்கிறனே.

முகஞ் சுழிச்சு பாக்கையிலே,
அகம் கிழிஞ்சு போகுதய்யா.
என்னை,
அருவருத்து ஒதுக்கையிலே,
அங்கமெல்லாம் கூசுதய்யா.

தப்பாகப் புறந்தது நான் செஞ்ச
தப்பா? தவறியும் தெரியலையே.
அப்பா அம்மா செஞ்ச தப்பா?
அதுவும் எனக்குப் புரியலையே.
விதி செஞ்ச தப்பால நான்
வீதியிலே நிக்கிறனே.
தப்பான தலையெழுத்தால்,
தடுமாறித் தவிக்கிறனே.

ஆணானாலும்,
பெண்ணானாலும்,
அதன் நடுப்புறந்த
புறப்பானாலும்,
அடங்கா பசியும், ஆருயிரும்
அனைவருக்கும் ஒண்ணுதானே.

அர்த்தநாரீஸ்வரர் சாமியாம்.
ஆண்டவனாய்க் கும்பிடணுமாம்.
அர்த்தமில்லாத வாழ்க்கையிலே
அழுந்தி உழலும் அலியெனக்கு,
ஆதரவாய்க் காட்டு வழியெனக்கு.

ச.தீபன்
9443551706

எழுதியவர் : தீபன் (23-Jul-20, 5:02 pm)
பார்வை : 117

மேலே