வேதனை மிகுந்த ஏற்றம்

இவ்வுலகத்து மாந்தர்களே உண்மையை உணர்வோமா
வளமான நிகழ்ச்சிகள் இல்லை வாங்க ஆளுமில்லை
இறைபணிக்கு காணிக்கையிட எக்கோயிலும் திறக்கவில்லை
பிரிவு உபச்சாரமுமில்லை பிள்ளை பேறு விழாவும் இல்லை
கள்ளத்தனமாய் வாங்கி குவிக்க கையிலே காசுமில்லை
ஆளேற்றும் வாகனம் அனைத்தும் முடங்கி ஓய்விலிருக்க.
சோற்றின் தரமும் கூட மாதந்தோறும் மாறுபாடாய்
கிரீட நோயின் கிலியினாலே உலக பந்து சோம்பி நிற்க
தங்கத்தின் விலையோ தினமும் தாறுமாறாய் ஏறுவது எதனால்
வாகன எரிபொருள் விலையும் வானளவு உயர்வு எதனால்
அரணான அரசுகளோ அதனை சரி செய்ய முயலவில்லை
உயிர் பயம் உள்ள போதே கருதாமல் காசை சேர்ப்போர்
உன்னத வாழ்விற்காக உலகத்தோர்க்கு என்ன செய்வர்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Jul-20, 7:48 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 38

மேலே