தவிக்கும் மனிதன்

குப்பை வண்டி...
குப்பை வண்டி...
என்று குப்பம்மாள்
குரல் கேட்டு...! !

வீட்டில் உள்ளவர்கள்
வெளியே வந்து
மக்கும் குப்பை
மக்காத குப்பை
என்று பெயர் தாங்கிய
குப்பை பெட்டியில்
தங்களது
வீட்டு குப்பைகளை
கொட்டினார்கள்...! !

இதுபோல்...
மனிதனின்...! !
மனம் என்னும் கூட்டில்
எல்லோர் மனதிலும்
வித விதமான
குப்பைகள்..! !

ஆனால்...! !
கொட்டும் இடம்
தெரியாமல்
தவிக்கும் மனிதர்கள்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Jul-20, 8:37 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thavikkum manithan
பார்வை : 78

மேலே