இயற்கை - ஓட்டம்

பாய்ந்தோடும் புலி சிறுத்தை சிங்கத்தின் ஓட்டம்
குதித்து பாய்ந்தோடும் குதிரையின் ஓட்டம்
அழகாயித் துள்ளி ஓடும் புள்ளி மானின் ஓட்டம்
விஷமம் பல செய்துகொண்டு மரக்கிளையைத் தொத்தி தொத்தி
விந்தையை ஓடும் குரங்குகளின் ஓட்டம்
கூட்டமாய் பிளிறிக்கொண்டு மெல்ல ஓடும் யானைக்கூட்டம்
கண்ணிமைக்கும் நேரத்தில் தத்தி ஓடும் முயலின் ஓட்டம்
வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தோடும் நதியின் ஓட்டம்
மலையிலிருந்து புறப்பட்டு ஓடி ஓடி மண்ணில்
வந்து வீழும் நீர்விழுச்சியின் ஓட்டம்
அழகாய் இசைத்தோடும் சிற்றோடையின் ஓட்டம்
அலை அலையாய் ஓடி வந்து கரையைத் தேடி தொட்டு போகும்
கடலின் ஓட்டம்
இவற்றையெல்லாம் கண்டு கற்றபின் ஓடும்
மனிதரின் ஓட்டம்
அப்பப்பா இயற்கையே இதை எல்லாம் பார்த்து
மகிழவைத்தாய் மனிதனை ஆறறிவு தந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jul-20, 7:15 am)
பார்வை : 203

மேலே